News articles in multiple languages

This is our main forum. Here, anything related to languages and linguistics can be discussed.

Moderator:Forum Administrators

vijayjohn
Language Forum Moderator
Posts:27056
Joined:2013-01-10, 8:49
Real Name:Vijay John
Gender:male
Location:Austin, Texas, USA
Country:USUnited States (United States)
Contact:
News articles in multiple languages

Postby vijayjohn » 2019-02-05, 5:26

Hi everyone! This thread is for taking news articles in a given language and translating (and possibly discussing) them (presumably into English in the interest of attracting the most attention and/or discussion, although I don't think that should be a requirement). We can also copy or transcribe the original text here.

I'll start off with this newspaper article from an issue of Tamil Murasu (தமிழ் முரசு), Singapore's only Tamil-language newspaper, from August 2, 2004. I wrote out the whole text of the article in the original Tamil but only tried translating the first few sentences because this is the first time I've ever seriously tried to understand Tamil political lingo, and it's hard! :P I'm including some URLs in the translation plus notes in square brackets to aid understanding to the best of my ability, but that isn't strictly necessary or anything, just something I hope might be helpful or useful:

Title: கருணாநிதி சொல்கிறார்

'தீர்ப்பை' மாற்ற தேவை 234:

Photo caption: தமிழ்நாடு முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்குப் பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது. திமுக தலைவர் கருணாநிதி, தமிழகக் காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Author: தங்கமுஹையதின்

Text: மக்களவைத் தேர்தலில் 40ம் நமக்கு என்று ஆனது போல் 234 சட்டசபைத் தொகுதிகளும் நமக்கு என்றாக வேண்டும் என்று கருணாநிதி பேசினார்.

தமிழ்நாடு முஸ்லிம் அமைப்புகள் சார்பில் ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்குப் பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் திமுக தலைவர் கருணாநிதி கலந்துகொண்டு பேசியதாவது:

இந்தியாவிலே நாம் அமைந்திருக்கின்றன இந்த ஆட்சி உள்ளபடியே நான் எதிர்பாராதது தான். அதைச் சொல்வதில் தவறில்லை. எதிர்பார்த்த ஒன்று என்று நான் சொல்லாததற்குக் காரணம், அந்த அளவிற்கு அப்போது நாடாண்டு கொண்டிருந்த அரசு நாள்தோறும் விளம்பரங்களைச் செய்து கொண்டிருந்தது. எடுத்த எடுப்பிலேயே இந்திய நாட்டு மக்கள் எல்லாம் திடுக்கிடத்தக்க வசையில் இந்தியா ஒளிர்கிறது என்ற விளம்பரத்தைச் செய்தார்கள். எல்லாரும் திடுக்கிட்டார்கள். ஏனென்றால் எங்கே ஒளிர்கிறது என்று. இந்தியன், தமிழன், தெலுங்கன், பஞ்சாபி அத்தனை பெரும் இருட்டிலே நின்று தவித்துக்கொண்டு இந்தியா எங்கே ஒளிர்கிறது என்று கேட்டான்.

இங்கே நம்முடைய நண்பர்கள் வரவேற்புரையிலும் சொன்னார்கள். தலைமை வகித்த அருமை நண்பர் ஜவாஹிருல்லா முடிவுரையிலும் எடுத்துக் காட்டினார்கள். அதைப் பற்றி நம்முடைய முதலமைச்சரிடம் கடந்த வாரம் செயதியாளர்கள் கேட்டிருக்கிறார்கள்.

கே: சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு கொடுப்பது பற்றி உங்கள் கருத்தென்ன?

ஜெயலலிதா: முஸ்லிம்கள் மட்டும் சிறுபான்மையினர் அல்ல. கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். பார்சிகள் இருக்கிறார்கள். ஜெயின்கள் இருக்கிறார்கள். புத்த மதத்தினர் இருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் சமமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். முஸ்லிம்களுக்குத் தனி ஒதுக்கீடு அளித்தால், நாளை கிறிஸ்தவர்களும் இட ஒதுக்கீடு கேட்பார்கள். அப்புறம் மற்ற சிறுபான்மையினரும் கேட்பார்கள். எனவே இவ்வாறு செய்வது இயலாத ஒன்றாகும். அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அவர்கள் ஏற்கெனவே பல சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள். பெரும்பான்மை சமூகத்தினர் அந்தச் சலுகைகளை எல்லாம் அனுபவிக்கவில்லை. ஏற்கெனவே சலுகைகளை அனுபவித்து வரும் சிறுபான்மை சமுதாயத்தினருக்கு மேலும் சலுகைகளை வழங்க முடியாது.

இது நம்முடைய முதலமைச்சரின் தீர்ப்பாக அமைந்துவிட்டது. இதை மற்ற வேண்டுமேயானால் எப்படி பல விஷயங்கள் இப்போது மாற்றப்பட்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். நாற்பதும் நமக்கு என்று ஆனா பிறகு, இலவச மின்சாரம் வழங்கவே மாட்டேன் என்று சொன்னவர்கள், இலவச மின்சாரத்தை வழங்குகிறேன் என்று இன்றைக்குப் பின்வாங்கியதைப் போல், சிறுபான்மை சமுதாயத்திற்கு எதையும் செய்யமுடியாது என்று சொல்பவர்கள், சிறுபான்மை சமுதாய மக்களுக்குத்தான் சலுகை அளிப்பேன் என்று அவர்களுடைய வாயாலேயே சொல்ல வைக்கவேண்டுமேயானால், எப்படி நாற்பதும் நமக்கு என்று ஆயிற்றோ, அதை போல 234 தொகுதிகளும் நமக்கு என்று ஆனால்தான் அதைச் சொல்ல வைக்க முடியும்.

அதைச் சொல்வார்கள், நிச்சயமாகச் சொல்வார்கள். அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்காகவாவது பயன்படாதா என்று சொன்னாலும் சொல்வார்கள். எனவே அப்படி அவர்களைச் சொல்லவைக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அந்தப் பொறுப்பு நமக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

My attempt at a translation into English:

Title: Karunanidhi Says

234 [Assembly Segments?] Needed to Change the "Decision": :?:

Photo caption: A festival took place in Chennai to celebrate the leader's progressive movement to support Muslim asssociations in Tamil Nadu. :?: Several people such as DMK leader Karunanidhi and Tamil Congress Leader G. K. Vasan attended.

Author: Thanga Muhayadin

Text: "As we are in the 40th Lok Sabha Election, we need 234 assembly segments," Karunanidhi said. [Each member of the Lok Sabha represents a constituency, and each constituency is made up of assembly segments].

A festival took place in Chennai to celebrate the leader's progressive movement to support Muslim asssociations in Tamil Nadu. :?:

DMK leader Karunanidhi attended the festival and said:

"As this heritage that we have built up is in India itself, I am not in opposition. :?: There is nothing wrong in saying that. The reason why I say that I do not have an objection to it is that the rulers who had been in power for so many years had been making declarations on a daily basis. :?:"

Return to “General Language Forum”

Who is online

Users browsing this forum: No registered users and 11 guests